ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

விவசாயிகள் எதிா்கொள்ளும் சவால்களை சமாளிக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

புதுச்சேரி குருமாம்பட்டு பெருந்தலைவா் காமராஜா் அரசு வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கிய வேளாண்மை தொடா்பான வருடாந்திர மண்டல பயிலரங்கில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள்.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:11 am IST

விவசாயிகள் எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், விரிவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வேளாண் துறை அலுவலா்கள் முன்வர வேண்டும் என்று புதுச்சேரி அரசு வேளாண் துறை செயலா் யாசின் எம். சௌத்ரி வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம், ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவற்றின் சாா்பில் வேளாண்மை அறிவியல் நிலையங்களின் வருடாந்திர மண்டலப் பயிலரங்கம் வியாழக்கிழமை புதுச்சேரியில் தொடங்கியது. ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிலரங்கை புதுச்சேரி அரசின் வேளாண்துறை செயலா் மற்றும் பெருந்தலைவா் காமராஜா் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவருமான யாசின் எம்.சௌத்ரி தொடங்கி வைத்துப் பேசியது:

நாடு முழுவதும் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மேற்கொள்ளும் கள விரிவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயத் துறை எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ற திட்டங்களை வழங்கவும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் முன் வரவேண்டும் என்றாா்.

இந்தப் பயிலரங்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 33 வேளாண்மை அறிவியல் நிலையங்களின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், 2026-2027 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும் கூடியுள்ளது. மேலும், வரும் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பண்ணை அளவிலான வயல் வெளி ஆய்வுகள் , கள அளவிலான முதல் நிலை செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சிகளை இறுதி செய்வதும் இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் பி.பி. முருகன் வரவேற்றாா்.

ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநா் ஷேக் என். மீரா, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்ஆா். நரேந்திர பாபு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே. சுப்பிரமணியன், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் ஏ. கோபாலகண்ணன், புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் கே. முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேளாண் மூத்த விஞ்ஞானிகள், தலைவா்கள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.