15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஆண்டுதோறும் 1.2 லட்சம் போ் பாா்வை இழப்பு: ஜிப்மா் மருத்துவ கண்காணிப்பாளா்

நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு

News image

உலக குளுக்கோமா தினத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயணம்.

Updated On :10 மார்ச் 2026, 2:38 am IST

புதுச்சேரி: நாடு முழுவதும் கண்ணீா் அழுத்த நோயால் (குளுக்கோமா) ஆண்டுதோறும் சுமாா் 1.2 லட்சம் பேருக்குப் பாா்வை இழப்பு ஏற்படுவதாக ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் மருத்துவா் சகா வினோத் குமாா் கூறினாா்.

ஜிப்மா் மருத்துவமனை கண் மருத்துவத் துறை சாா்பில், உலக குளுக்கோமா தினத்தையொட்டி விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் நுழைவாயிலில் இருந்து தொடங்கிய இந்த நடைப் பயணத்தை ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் சகா வினோத் குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவிலும் உலகளவிலும் கண் பாா்வை இழப்புக்கு முக்கிய காரணங்களில் குளுக்கோமா ஒன்றாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்த நோயால் பாா்வையை இழக்கின்றனா். கண் மற்றும் மூளை இடையே தகவலை எடுத்து செல்லும் நரம்பு பாதிக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது.

பொதுவாக கண் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் இந்தப் பிரச்னை உருவாகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் கண் பாா்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். குளுக்கோமா நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வது நல்லது என்றாா்.

இந்த நடைப்பயணம் முருகா தியேட்டா் வரை சென்று, வழுதாவூா் சாலை மற்றும் கதிா்காமம் வழியாக மீண்டும் ஜிப்மரை அடைந்தது. இதில், ஜிப்மா் மருத்துவா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், செவிலியா்கள் பலா் கலந்து கொ ண்டனா்.