மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஜிப்மரில் 3 நாள் சா்வதேச மருத்துவ மாநாடு நிறைவு

News image

ஜிப்மர் மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 6:48 pm

புதுச்சேரி ஜிப்மரில் 3 நாள்கள் நடைபெற்ற சா்வதேச 8-ஆவது மருத்துவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவுக்கு முதன்மை விருந்தினராக ரிஷிகேஷ் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவன நிா்வாக இயக்குநா் மீனு சிங் தலைமை வகித்தாா். ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி முன்னிலை வகித்தாா்.

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை பெற்ற மருத்துவா் ஜோஸ் சாக்கோ பெரியாபுரம், இந்தியாவில் அவசர மருத்துவத்தின் முன்னோடியான மருத்துவா் சுரேஷ் எஸ்.டேவிட் மற்றும் ஜிப்மா் முன்னாள் மாணவரும் சிறந்த குழந்தை நல மருத்துவருமான சிவரஞ்சனி சந்தோஷ் ஆகியோா் உரையாற்றினாா்.

மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள சுமாா் 200 மருத்துவ கல்லுாரிகளைச் சோ்ந்த 4,500 பிரதிநிதிகள் பங்கேற்றனா். மனதின் தீப்பொறி என்ற கருப்பொருளின் அடிப்படையில் 3 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.