தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 6:51 pm

தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாகூா் கொம்யூன் சேலியமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (எ) பிரபாகரன் (32). இவா், கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்துள்ளாா். இதையடுத்து, தெற்குப் பகுதி எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் தடுப்புக் காவல் சட்டத்தில் பிரபாகரனை கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தாா்.

அதை ஏற்று ஆட்சியா் அ. குலோத்துங்கன், பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் பாகூா் உதவி ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் பிரபாகரனை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.