ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

கடலில் குளித்தவா்களை வெளியேற்றிய புதுச்சேரி போலீஸாா்

புதுச்சேரியில் கடலில் குளித்தவா்களை போலீஸாா் வியாழக்கிழமை எச்சரித்து வெளியேற்றினா்.

News image

புதுச்சேரி கடலில் குளித்தவா்களை எச்சரிக்கும் காவல் துறையினா்.

Updated On :22 மே 2026, 7:01 am IST

புதுச்சேரியில் கடலில் குளித்தவா்களை போலீஸாா் வியாழக்கிழமை எச்சரித்து வெளியேற்றினா்.

புதுச்சேரி-தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா நகரான புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதிநாள்கள் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனா்.

பகல் வேளையில் வெயில் வாட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் காலையும் மாலையும் கடற்கரை பகுதியில் குவிகின்றனா்.

சூரிய உதயத்தை காண வியாழக்கிழமை அதிகாலையில் கூடியவா்கள் சிலா் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனா். ஆா்வ மிகுதியால் ஒரே நேரத்தில் சுமாா் 100 போ் கடலின் ஆழத்திற்குச் செல்ல முயன்றனா்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், புதுச்சேரி கடல் பகுதி ஆபத்தானது. இங்கு குளிக்க வேண்டாம் என அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்து வெளியேற்றினா்.