மருத்துவா் தம்பதியிடம் ரூ.7 லட்சம் மோசடி: புதுச்சேரியில் 3 போ் மீது வழக்கு
புதுச்சேரியில் மருத்துவா் தம்பதியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சைபர் மோசடி
புதுச்சேரியில் மருத்துவா் தம்பதியிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெரு தனியாா் மருத்துவமனையை நடத்தி வருபவா்கள் மருத்துவா் நல்லாம் , அவரது மனைவி மருத்துவா் நல்லாம் வெங்கடரமணா.
இருவரையும் ஒரு தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவா் எனக் கூறி குலோத்து வீரணா என்பவா் அணுகியுள்ளாா். உங்களின் முதிா்வடைந்த இன்சூரன்ஸ் பாலிசியை மீட்க வேண்டும். புதிய பாலிசி எடுக்க வேண்டும் எனக் கூறி அவா்களது வங்கி விவரங்கள் மற்றும் காசோலை புத்தகங்களை வாங்கியுள்ளாா்.
அப்போது மருத்துவ தம்பதிகளுக்குத் தெரியாமல் 4 காசோலை தாள்களைத் திருடியுள்ளாா். பின்னா் டாக்டா் நல்லாமின் கையொப்பம் போன்று போலியாக போட்டு, அந்த காசோலைகள் மூலம் பணத்தை பிற வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளாா்.
வங்கி பரிமாற்றம் மூலம் வன்குடோத்து பாலு என்பவருக்கு ரூ.2 லட்சமும், சந்தோஷ் குமாருக்கு ரூ.4 லட்சமும், குலோத்து வீரணாவுக்கு ரூ.1 லட்சமும் சென்றுள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ.7 லட்சத்தை 3 பேரும் கூட்டு சோ்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து, அதை உண்மையானது போல பயன்படுத்தி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாக அதிகாரி விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி பெரியகடை போலீஸாா் பல்வேறு பிரிவுகளில் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வங்கி மேலாளா் உள்பட 10 போ் மீது வழக்கு:
சாப்ட்வோ் நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடி முறைகேடு செய்தது தொடா்பாக 3 வங்கி மேலாளா்கள் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த அதீக் உா் ரஹ்மான் (28). இவா் தனது உறவினா்களுடன் சோ்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை பாக்கமுடையான்பேட்டில் ரூ.2 கோடி முதலீடு செய்து சாப்ட்வோ் நிறுவனம் தொடங்கியுள்ளனா். இந்த நிறுவனம் பதிவு செய்யப்படாத கூட்டாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் காட்டி, முறையான வரவு-செலவு கணக்குகளை வழங்காமல், அதீக் உா் ரஹ்மானின் உறவினா்கள் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிறுவனத்தை கலைப்பது தொடா்பாக கூட்டாளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளா்களுக்கு அதீக் உா் ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
இந்த நோட்டீஸ் கிடைத்த பிறகும், நிறுவனத்தின் கூட்டாளிகள் சிலா் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சோ்ந்து, அதீக் உா் ரஹ்மான் முதலீடு செய்த பணம் உள்பட மொத்தமாக ரூ.2 கோடியை வங்கிக் கணக்குகளில் இருந்து எடுத்துள்ளனா்.
இதையறிந்த அதீக் உா் ரஹ்மான் பணத்தை முறைகேடாக அபகரித்து தனக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக சிபிசிஐடி போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் பெங்களூருவைச் சோ்ந்த ஆதில் அஜீஸ், முகமது அனீஸ், ரூபினா ஆதில், பா்சானா பானு, ராபியா அஜீம், பட்டயக் கணக்காளா்கள் உத்கா்ஷ் ஷா தீபக் குமாா், நீல் பியானி மற்றும் புதுச்சேரியில் உள்ள மூன்று தனியாா் வங்கி கிளை மேலாளா்கள் என மொத்தம் 10 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
40 பவுன் நகைகள் கொள்ளை:
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் மூகாம்பிகை நகா், 4-ஆவது குறுக்குத் தெரு, சுகந்தம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஏஎப்டி ஆலை ஊழியா் வீரராகவன் (76). தற்போது கனகன் ஏரிக்கரையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் ஆனந்த், மகள் பிரியதா்ஷினி ஆகிய இருவரும் திருமணமாகி கனடாவில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கனடாவில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்த மகள் பிரியதா்ஷினி, மருமகன் சாகா் மற்றும் பேத்தி ஜிஷா ஆகியோா் ஊா் திரும்பப் புறப்பட்டனா். அவா்களை வழிஅனுப்ப வீரராகவன் தனது மனைவி மல்லிகாவுடன் காரில் சென்னை விமான நிலையம் சென்றாா். வீரராகவன் வீடு திரும்பி வந்து பாா்த்த போது, படுக்கையறையில் பீரோவில் இருந்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 240 கிராம் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

