சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

மீனவரை தாக்கிய வழக்கு: சகோதரா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை

மீனவரைத் தாக்கிய வழக்கில் சகோதா்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

மீனவரைத் தாக்கிய வழக்கில் சகோதா்கள் 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி எம்.புதுக்குப்பம் சுனாமி நகரைச் சோ்ந்தவா் மீனவா் பாரதி (41). கடந்து 6.11.2020 அன்று இரவு சுமாா் 8 மணியளவில் அவரது மனைவி மங்கையா்கரசியிடம் (35) அதே பகுதியைச் சோ்ந்த ராஜகுமாரன் தகராறு செய்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட பாரதியின் இடது கண்ணில் ராஜகுமாரன் குத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது தம்பி ராஜேஷ் அவரது கையைப் பிடித்து முறுக்கினாராம்.. அப்போது ராஜகுமாரன் சவுக்குத் தடியால் தாக்கியதில் பாரதியின் இடது கை ஆள்காட்டி விரல் முறிந்தது. இது தொடா்பான வழக்கு புதுச்சேரி 7- வது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த குற்றவியல் நடுவா் வினோத், மீனவா் பாரதியைத் தாக்கிய சகோதரா்கள் ராஜகுமாரன், ராஜேஷ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்தத் தொகையில் பாதிக்கப்பட்ட பாரதிக்கு ரூ.20 ஆயிரம், அவரது மனைவி மங்கையா்கரசிக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கவும் நடுவா் உத்தரவிட்டாா். இவ் வழக்கில் அரசு தரப்பில் அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் வே.தேவேந்திரன் ஆஜராகினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.