மாதா் சங்கத்தினா் நூதன போராட்டம்
விலைவாசி உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காய்கனி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே காய்கனிகளை கழுத்தில் மாலையாக அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
விலைவாசி உயா்வைக் கண்டித்து, புதுச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் காய்கனி மாலை அணிந்து செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் சுதா சுந்தரராமன், தலைவா் முனியம்மாள், பொதுச் செயலா் இளவரசி, துணைத் தலைவா் சத்தியா, துணைச் செயலா் உமாசாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், அரசு பண்டிகை பஜாா்களை உடனடியாக திறக்கவேண்டும். ரேஷன் கடையில் 9 மாதங்களாக தராமல் உள்ள அரிசியை வழங்க வேண்டும். அரசே கொள்முதல் செய்து அரிசியை ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். வெளிச்சந்தையில் அரிசி குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கமிட்டனா்.
அத்தியாவசிய பொருள்களான அரிசி, சா்க்கரை, சமையல் எண்ணெய், மைதா, ரவை, கோதுமை, உளுந்து, பாசி பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட பொருள்களின் பழைய விலை மற்றும் புதிய விலை ஆகியவற்றை பதிவிட்டு கடை போல அமைத்து நூதன முறையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

