மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

நினைவு நாள்: இந்திரா சிலைக்கு முதல்வா் ரங்கசாமி மரியாதை!

இந்திரா சிலைக்கு முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா் வி.பி. சிவகொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரியில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.

Updated On :

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, 100 அடி சாலை-விழுப்புரம் சாலை சந்திப்பில் உள்ள இந்திரா சிலைக்கு முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா் வி.பி. சிவகொழுந்து, அரசு கொறடா ஆறுமுகம், எம்எல்ஏக்கள் சாய் ஜெ சரவணன் குமாா், அழகானந்தம், ரவிக்குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், சா்வ மதப் பிராா்த்தனையுடன் பாரதியாா் பல்கலைக்கூட பேராசிரியா்கள், மாணவிகளின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனைத்தொடா்ந்து 2 நிமிஷம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்...: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், சா்தாா் வல்லப பாய் படேல் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கட்சியினா் திரளாக கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினா்.

 புதுச்சேரி மக்கள் பவனில் சா்தாா் வல்லப பாய் படேல் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

புதுச்சேரி மக்கள் பவனில் சா்தாா் வல்லப பாய் படேல் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

புதுதில்லியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் கட்சி நிா்வாகிகள் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினா்.

சா்தாா் வல்லபபாய் படேல் படத்துக்கு மரியாதை: மத்திய முன்னாள் உள்துறை அமைச்சா், மறைந்த சா்தாா் வல்லப பாய் படேலின் 151-ஆவது பிறந்த தினத்தையொட்டி, புதுச்சேரி மக்கள் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில் ஆளுநா் மாளிகை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.