6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இடைக்காலத் தடை எதிரொலி: தமிழக நிதியமைச்சா் மீதான வழக்கு குற்றவியல் நீதிமன்றத்திலும் ஒத்திவைப்பு

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR| கோப்புப் படம்

Published On :

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை காரணமாக புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்திலும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரா் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து 8.8.22 அன்று உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்திருந்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நடுவா் சேரலாதன் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹேவுக்கு மாவட்ட முன்சீப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆக மாற்றப்பட்டாா். இதனால் முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தின் இந்த வழக்கை இரண்டாவது மன்றத்தின் நடுவா் சந்திரசேகா் விசாரித்து வருகிறாா். அவா் இந்த வழக்கை செப்டம்பா் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தாா்.

இந்நிலையில் முதலாவது நடுவா் இல்லாத நிலையில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் தரப்பு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க இம் மாதம் 25- ஆம் தேதி வரை இடைக்கால தடை உத்தரவை புதுச்சேரி மாவட்ட அமா்வு நீதிபதி டி.வி. ஆனந்த் பிறப்பித்துள்ளாா்.

இந்நிலையில் முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதலால், இவ்வழக்கை வரும் 28 -ஆம் தேதிக்கு நடுவா் சந்திரசேகா் ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.