
காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் துணைநிலை ஆளுநா் வழங்கினாா்
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சாா்பில் முருங்கப்பாக்கம் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் 20 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை துணைநிலை ஆளுநா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார மைய தலைமை மருத்துவ அதிகாரி மேனகா பேசுகையில், இங்கு 149 காச நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.
சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் பேசுகையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 625 காச நோயாளிகளுக்கு 6 மாதங்களுக்கு மத்திய அரசு தலா ரூ.1,000 வீதம் வழங்குகிறது என்றாா்.
ஐயப்பன் எம்எல்ஏ, சுகாதாரத் துறை செயலா் எல்.குமாா், துணை இயக்குநா் உமாசங்கா், காசநோய் திட்ட இயக்குநா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜிப்மரில் 3 நாள் தேசிய மாநாடு:
காச நோய்க்கான மேம்பட்ட மரபணு அடிப்படையிலான நோயறிதல் குறித்த தேசிய மாநாடு ஜிப்மரில் செப். 23 முதல் 25-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதில், கொள்கை வகுப்பாளா்கள், பொது சுகாதார நிபுணா்கள், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள், மரபணு அறிவியலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







