பால் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.


விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோயிலில் 54-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகத்துடன் தொடங்கியது.
சித்ரா பௌர்ணமியான ஞாயிற்றுக்கிழமை காலை வீரவாழியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 108 பால் காவடியுடன், கைலாசநாதர் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர் . பின்னர், அங்குள்ள சிவசண்முக முருகனுக்கு பால்
அபிஷேகம், ஆராதனை செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகமும், செவ்வாய்க்கிழமை இடும்பன் பூஜையும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...