திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, இந்தக் கோயிலில் வஸந்த உற்சவ விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.
விழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவர்ண பூஜை, மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அர்ச்சனை, தீபாராதனை செய்யப்பட்டு, சோமாஸ்கந்தர் வஸந்த மண்டபத்துக்கு எழுந்தருளி, சோடசோபஸார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வஸந்த மண்டபத்தில் நாகஸ்வரம்-தவில் மங்கல வாத்தியம், வேத மந்திரங்கள், சிவபுராணம்-தேவாரம், சின்ன மேளம், சங்கவாத்தியம் என முறையே 5 பிரதட்சணங்கள் முழங்கப்பட்டது.
பின்னர், சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஆலய வளாகத்தில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் கோயில் குருக்கள் செய்திருந்தனர்.
ஞானானந்த தபோவனத்தில்...: திருக்கோவிலூர் அருகே ஞானானந்த தபோவனத்தில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ரஜபம், மூர்த்திகள் அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், பாதபூஜை, காலை 8 மணிக்கு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு மணி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, அதிஷ்டான பூஜைகள் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை தபோவனம் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.