அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சிறுவந்தாட்டில் கண்காணிப்புக் கேமராக்கள்

விழுப்புரம் அருகேயுள்ள சிறுவந்தாட்டில் குற்றச் சம்பங்களைத் தடுக்க பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:57 am IST

விழுப்புரம் அருகேயுள்ள சிறுவந்தாட்டில் குற்றச் சம்பங்களைத் தடுக்க பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் ஞாயிற்றுக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகேயுள்ள சிறுவந்தாடு கிராமத்தில் ஏராளமான பட்டுத் துணிக் கடைகள் உள்ளன. 
இங்கு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பட்டுத் துணி வாங்க பொதுமக்கள் வந்து செல்வர். விழாக்கள், திருவிழா காலங்களில் பல லட்ச ரூபாய் வியாபாரம் நடைபெறும்.  இந்த நிலையில், கார், இரு சக்கர வாகனங்களின் வந்து செல்வோரிடம் பணம், நகை அவ்வப்போது திருடுபோவதும், குற்றச் சம்பவங்களும் நிகழ்ந்து வந்தன. இதைத் தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அப்பகுதி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதனை ஏற்று, வியாபாரிகள் சிறுவந்தாட்டில் முக்கிய இடங்களில் ரூ.2 லட்சம் செலவில், 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.   இந்தக் கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்.பி.  ஜெயக்குமார் கலந்துகொண்டு கேமராக்களின் இயக்கத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.
    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சங்கர், பயிற்சி டி.எஸ்.பி. வினோதினி, வளவனூர் காவல் ஆய்வாளர் லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், பலராமன், அப்பகுதி வணிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.