சங்கராபுரத்தில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் வாசவி திருமண மண்டபத்தில், ஸ்டார் கிளப், பொதுசேவை அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் சார்பில் கடந்த 27-ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து வரும் ஜன.1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவின் நோக்கத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக, நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க மாவட்டத் தலைவர் வேலு தலைமை வகித்தார்.
நல்லாசிரியர் மு.முகமது
உசேன், வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், கவிஞர்கள் பாரதிகிருஷ்ணன், சையத்கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் புதியதாய் பிறப்போம் - சரித்திரம் படைப்போம் என்ற தலைப்பில் மதுராந்தகம் செண்டு பொறியியல் கல்லூரியின் முதல்வர் அ.முஹம்மது அப்துல்காதர் பேசினார்.
ஜெய் பிரதர்ஸ் கபடிக் குழுத் தலைவர் வ.விஜயகுமார், தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி, அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், மருத்துவர் வை.நெடுஞ்செழியன், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் ஷாநவாஸ்கான், இனாயத்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









