தி.வேல்முருகன் ஜாமீன் மனு இன்று விசாரணை

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on
1 min read

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில் கைதான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 
செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 5) ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், கடந்த ஏப்ரல் 1-இல் நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்தக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனை மே 26 ஆம் தேதி போலீஸார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி கடந்த மே 28-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் மூலமாக தி.வேல்முருகன் மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சரோஜினிதேவி, வழக்கு விசாரணையை 
செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com