பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் கள ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்து மயிலத்தில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்கள், எஸ்.பி. அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரடி கள ஆய்வுக்கு வந்து பார்வையிட்டனர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்து மயிலத்தில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்கள், எஸ்.பி. அலுவலகத்துக்கு புதன்கிழமை நேரடி கள ஆய்வுக்கு வந்து பார்வையிட்டனர்.
 தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் 1,100 பேர் விழுப்புரம், மயிலம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் 6 மாத பயிற்சி பெற்று வருகின்றனர்.
 இங்கு, காவலரின் அடிப்படை செயல்கள், சட்டப் பிரிவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து காவல்துறை அதிகாரிகள், நீதித் துறை வல்லுநர்கள், மனோதத்துவ மருத்துவர்கள் உள்ளிட்டோர் பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், காவலர்கள் உடல் பயிற்சி, அணிவகுப்பு, ஆயுதம் ஏந்தி அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்துதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
 பயிற்சி பெற்று வரும் இரண்டாம் நிலைக் காவலர்கள், மாவட்டத்தில் உள்ள காவல் தலைமையகத்துக்கு கள ஆய்வுக்கு அழைத்து வரப்படுகின்றனர். புதன்கிழமை மயிலம் அருகேயுள்ள கொல்லியங்குணத்தில் பயிற்சி பெற்று வரும் இரண்டாம் நிலை பெண்காவலர் 50 பேர் உதவி காவல் ஆய்வாளர்கள் பிரபாவதி, கலைச்செல்வி தலைமையில் மாவட்ட காவல் தலைமையத்துக்கு கள ஆய்வுக்கு வந்தனர்.
 பயிற்சி பெண் காவலர்களுக்கு அங்குள்ள தொழில் நுட்பப் பிரிவுகள், அறிவியல் பிரிவுகள், பல்வேறு அலுவலகங்களை சுற்றிக்காட்டி, உதவி ஆய்வாளர்கள் விளக்கினார். மேலும், உயர் அதிகாரிகளின் பொறுப்புகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com