127 மையங்களில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை 39,870 பேர் எழுதுகின்றனர்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. 127 மையங்களில் 39 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. 127 மையங்களில் 39 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி ஏப்.16 வரை நடைபெற உள்ளது. இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 284 மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் 39,870 மாணவ, மாணவிகள் 127 மையங்களில் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 5,681 மாணவர்களும், 6,387 மாணவிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களில் 7,233 மாணவர்களும், 7,740 மாணவிகளும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 6,662 மாணவர்களும், 6,197 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
 பிளஸ் 2 தனித்தேர்வுகள் 4 தேர்வு மையங்களில், 1,987 பேரும், பிளஸ் 1 தனித்தேர்வர்கள் 3 மையத்தில் 28 பேரும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுப்பணிக்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்பட 3ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.
 வருவாய்த் துறை அதிகாரிகள், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் தனித்தனி பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
 தேர்வின்போது, ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதாக மாணவர்கள் பிடிபட்டால், இரு பருவங்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமையிலான கல்வித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com