விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி தொடக்கி வைத்தார்.
விண்ணப்ப விநியோகம் வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர் காவேரியம்மாள் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு வெளியாக உள்ள நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.
அரசு மகளிர் கல்லூரி: விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் நகராட்சி, காமராஜர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில், பி.ஏ. ஆங்கிலம், தமிழ், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், பி.காம். ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரும் மே 31-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்(பொ) ரவிசங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

