விழுப்புரம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவனது தாய் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள காட்ட முத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(30).
இவர், புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (27).
இவர்களது நான்கரை வயது மிதுன், விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 8 மாத ஆண் குழந்தை வீட்டில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்தது. இதனை, உறவினர்கள் பெரிது படுத்தாமல் பார்த்துக்கொண்டனர்.
இதனிடையே, ஜெயசித்ராவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாம்.
இந்த நிலையில், கட்ட முத்து பாளையத்தில் இருந்து சிலம்பரசன் குடும்பம், விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பனங்குப்பம் கிராமத்தில் வாடகை வீடு எடுத்து, கடந்த வாரம் தங்கினர்.
கடந்த வியாழக்கிழமை வீட்டில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி, சிறுவன் மிதுன் உயிரிழந்து கிடந்தான். மேலும், தாய் ஜெயசித்ரா தலைமறைவானார்.
தகவல் அறிந்த வளவனூர் போலீஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த ஜெயசித்ராவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மிதுனை ஜெயசித்ராதான் கொலை செய்ததுடன், ஏற்கெனவே அவரது 8 மாத ஆண் குழந்தையையும் ஜெயசித்ரா கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் அவரிடம், இரு குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு, நான் ஏன் கொலை செய்தேன் என்று தெரியவில்லை என்று கூறினார்.
ஆகையால், ஜெயசித்ரா மனநனம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே, தனது குழந்தைகளை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் முடிவுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, ஜெயசித்ராவை நீதிபதி முன் ஆஜர்படுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






