விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வரும் 2019-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த செப்.1-ஆம் தேதி தொடங்கியது. வரும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறுகிறது.
செப்டம்பர் மாதத்தில் 2 முறை பெயர் சேர்த்தல் முகாம்கள் நடைபெற்றன.
இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை கோரி மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் முதல் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,639 இடங்களில் உள்ள 3,227 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம் நடைபெற்றது. இளம் வாக்காளர்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முறையாக பூர்த்தி செய்து வழங்கிய மனுக்களை வாக்குச்சாவடி நிர்ணய அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட முழுவதும் 12 ஆயிரத்து 500 மனுக்களை பெற்று பொதுமக்கள் பூர்த்தி செய்து அளித்ததாகவும், மீண்டும் இதேபோன்று வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சீனிவாசன் தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட பெரியக்குப்பம், அரசூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஜி.இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பெத்தானூர், கனியாமூர், ராயர்பாளையம், பிரதிவிமங்கலம், தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சித்தலூர், பானையங்கால், வேங்கைவாடி, குடியநல்லூர், உடையநாச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்களை கோட்டாட்சியர் ம.தினேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மண்டல துணை வட்டாட்சியர் ஜெ.கமலக்கண்ணன் உடன் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


