ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் க.தனவேல் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் எம்.யமுனாபாய் வரவேற்றார். ஜூனியர் ரெட்கிராஸ் ஆசிரியர் ஏ.தனராஜ் முன்னிலை வகித்தார். பேரணியில் பள்ளி மாணவர்கள், ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களும் பங்கேற்றனர். பிளாஸ்டிக் இல்லா சமுதாய விழிப்புணர்வு பேரணியில், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். 
பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்போம், மாசில்லாத சுற்றுச்சூழலை படைப்போம் என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, மாலை பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன. நெகிழிப்பொருள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து, தலைமை ஆசிரியர் தனவேல், வேதியியல் ஆசிரியர் கே.ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் சிறப்புரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.