கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் தன்னார்வலர்!

விழுப்புரத்தில் தன்னார்வலர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டு, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விழுப்புரத்தில் தன்னார்வலர் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டு, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாராயணன்(38). மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், தினமும் விழுப்புரத்தில் திருச்சி சாலையோரம் நின்று கொண்டு, அன்பளிப்பு என்ற பெயரில் மரக்கன்றுகளை அவ்வழியே செல்வோருக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
கடந்த 5 மாதங்களாக விழுப்புரம் தனியார் பண்ணை, ஈஷா யோகா மையத்திலிருந்து மா, பலா, தேக்கு, கொய்யா, நெல்லி, சீத்தா, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை ரூ.8 முதல் ரூ.20 வரை விலைக்கு வாங்கி வந்து இலவசமாக கொடுக்கிறார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், வறட்சி, வெயில் தாக்கத்தை குறைப்பதற்கு மரம் வளர்ப்பு ஒன்றே தீர்வு என்பதால், மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறேன். இதுவரை 5 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளேன். ஒரு லட்சம் மரக்கன்றுகளை வழங்குவதே இலக்கு என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.