சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கல்லூரியில் சிற்றாலயம் திறப்பு

 மயிலத்தை அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் இயங்கி வரும் பவ்டா கலை, அறிவியல் கல்லூரியில் சிற்றாலயத் திறப்பு விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:43 am IST

 மயிலத்தை அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் இயங்கி வரும் பவ்டா கலை, அறிவியல் கல்லூரியில் சிற்றாலயத் திறப்பு விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
பவ்டா கல்வி குழுமத்தின் தலைவர் ஜான்சாமுவேல் வரவேற்றார்.நிறுவனர் சி.ஜாஸ்லீன்தம்பி தலைமை வகித்தார். பொருளாளர் மகிழ் புனிதா, விழுப்புரம் தூய ஜேம்ஸ் ஆலயத்தின் ஆயரும்,  தலைவருமான இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆலீவர்ஜான், ஏர்னஸ்ட்ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட பவ்டா சிற்றாலயத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பிரதம பேராயர் தேவகடாட்சம் திறந்துவைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
நிகழ்ச்சியில் பவ்டா கல்லூரி முதல்வர் சுதா கிரிஸ்டிஜாய், கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், நிர்வாகிகள் ஏட்ரியானா, அவ்ரினா, அல்பினா, ஜோஷந்த், ஜாஸ்லின், பவ்டா குழுமக் குழும உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.