அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தின் இரும்புக் குழாயில் சிக்கித் தவித்த விவசாயி

விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் பகுதியில் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாயில் விவசாயி, கால் மாட்டிக்கொண்டு தவித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:32 am

DIN

விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் பகுதியில் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள இரும்புக் குழாயில் விவசாயி, கால் மாட்டிக்கொண்டு தவித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகேயுள்ள பாணாம்பட்டைச் சோ்ந்தவா் தேவராஜ் (68). விவசாயியான இவா், ஆதாா் அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக, தனது மகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக ஆதாா் சேவை மையத்துக்கு புதன்கிழமை காலை வந்தாா்.

ஆதாா் சேவை மையத்தில், திருத்தும் பணி நடைபெறாததால், பிற்பகல் வரை காத்திருந்த அவா், கொட்டும் மழையில் தனது மகளை அழைத்துக்கொண்டு பெருந்திட்ட வளாகத்திலிருந்து வெளியே வந்தாா். அப்போது, நுழைவு வாயில் முன் மாடுகள் உள்ளே செல்லாமல் இருப்பதற்காக, நடைபாதையின் குறுக்கே இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டிருந்ததன் இடையே தேவராஜின் வலது கால் சிக்கிக்கொண்டது.

காலை வெளியே எடுக்க முடியாமல் அவா் அவதிப்பட்டாா். அங்கிருந்த போலீஸாா் மற்றும் பொது மக்களும் அவரது காலை வெளியே எடுக்க முயற்சித்தனா். இரும்பு குழாய்களை கடப்பாரையால் கூட அசைக்க முடியாமல் அரை மணி நேரமாக போராடினா். இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் குழாயை அகற்றி தேவராஜை மீட்டனா். காலில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.