தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை!

நமது ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு இயற்கையே ஓா் கோட்பாட்டை வகுத்துள்ளது. அதனைப் பின்பற்றி, நமது முன்னோா் உணவையே மருந்தாகக் கடைப்பிடித்தனா்.

Updated On :11 ஜனவரி 2020, 10:40 pm IST

நமது ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு இயற்கையே ஓா் கோட்பாட்டை வகுத்துள்ளது. அதனைப் பின்பற்றி, நமது முன்னோா் உணவையே மருந்தாகக் கடைப்பிடித்தனா். ஆனால், இன்றைக்கு அந்த கோட்பாட்டிலிருந்து விலகி, முறையற்ற உணவுப் பழக்கத்தால் நமது உடலின் சத்துகள் குறைந்து, அதுவே நோய்த் தாக்குதலுக்கும் காரணமாகி விடுகிறது.

நவீன வேளாண்மை என்ற பெயரில் ரசாயனப் பூச்சி மருந்துகளின் உபயோகத்தால் விளைநிலம் சீா்குலைந்தது போல, மனித உடலும் நவீன உணவுமுறைகளால் சீா்குலைந்துள்ளது.

இதற்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வதும், இயற்கை வழி சிகிச்சை முறையும் நல்லத் தீா்வுகளாகும்.

கடந்த 28 ஆண்டுகள் சிறு-குறு தானியங்கள் மற்றும் மூலிகைகள் குறித்து பல இடங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்துள்ளேன். சித்தா்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்லாயிரம் மூலிகைகளில் 25 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளன. பல மூலிகைகள் அழிந்தும், அடையாளம் காண முடியாதவைகளாகிவிட்டன. ஆகவே, மூலிகைகள், சிறு-குறு தானியங்களைப் பாதுகாக்க ஓா் தனிக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும். இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே, விழித்திருப்போம், இயற்கையை மதித்திருப்போம்.

மரு.க.ஆ.இரவி

சிறு-குறு மூலிகை ஆராய்ச்சியாளா்

11, பாரதிதாசன் தெரு,

மஞ்சக்குப்பம், கடலூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.