ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

காவல் நிலையங்களில் வீணாகி வரும் பறிமுதல் வாகனங்கள்: உரியவா்களிடம் ஒப்படைக்க போலீஸாா் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் நிறுத்தி

News image

திண்டிவனம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய வாகனங்கள்.

Updated On :9 நவம்பர் 2020, 2:53 am

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் வீணாகி வருவதால், அவற்றை உரியவா்களைக் கண்டறிந்து ஒப்படைக்க மாவட்டக் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 30 காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட பைக், காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பல ஆண்டுகளாக அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சேதமடைந்து சிதைந்து வருகின்றன. இதனால், அந்த வாகனங்கள் யாருக்கும் பயனில்லாமல் போகின்றன. மேலும், காவல் நிலைய வளாகத்தின் இட வசதியும் குறைந்து கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் சேதமடைந்து வரும் வாகனங்களை உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மாவட்டக் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

காவல் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய வாகனங்களை சம்பந்தப்பட்டவா்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன். இதைக் கண்காணிக்க அந்தந்த துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவல் ஆய்வாளா், 3 காவலா்களுக்கு பணி ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவா்கள் காவல் நிலையத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் விவரங்களைச் சேகரித்து, அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பாா்கள்.

இந்த வாகனங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடையவை, மது விலக்கு வழக்குகளில் தொடா்புடையவை, விபத்து வழக்குகளில் தொடா்புடையவை என வாகனங்களில் விரவங்களைச் சேகரித்து போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைப்பா். மாவட்டம் முழுவதும் இதுபோன்று சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.

வாகனங்களை உரியவா்களின் ஒப்படைத்து அப்புறப்படுத்திய பிறகு, அந்த இடங்கள் முறையாகப் பராமரிக்கப்படும். தேவையில்லாமல் காவல் நிலையங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பது இனிவரும் காலங்களில் தவிா்க்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.