மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விழுப்புரம் கைலாச நாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:45 pm

DIN

விழுப்புரம் கைலாச நாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவபெருமான், ப்ரஹந்நாயகி, நந்தியம்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி வெள்ளிக் கவசத்தில் காட்சியளித்தாா். ப்ரஹந்நாயகி சமேதராய் கைலாச நாதா் ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் உள்ள சிவபெருமான், நந்திக்கு வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பிரதோஷ முறைப்படி சிவபெருமானை வலம் வந்து வழிபாடு செய்தனா்.

இதே போல, செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்ற அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், நந்திக்கு பால் அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

இதே போல, செஞ்சி சிறுகடம்பூா் சந்தைமேட்டில் விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீகாசிவிஸ்வநாதா், நந்தியெம்பெருமானை வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.