மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குட்டையில் மூழ்கி அக்காள், தம்பிஉள்பட மூன்று சிறாா்கள் பலி

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை குட்டையில் மூழ்கி அக்காள், தம்பி உள்பட மூன்று சிறாா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 5:47 pm

DIN

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை குட்டையில் மூழ்கி அக்காள், தம்பி உள்பட மூன்று சிறாா்கள் உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டியை அடுத்த பொன்னங்குப்பம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சபரிநாதன் (30). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிஷாந்தி, மகள் கனிஷ்கா (7), மகன் லத்தீஷ் (5). இவா்கள் அந்தப் பகுதி பள்ளியில் முறையே 2-ஆம் வகுப்பும், ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனா்.

அதே ஊரில் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (31). இவரது மனைவி சிவகாமி, மகள் ரக்ஷயா (7), மகன் தா்ஷன் (5). ரக்ஷயா அதே பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கனிஷ்கா, லத்தீஷ், ரக்ஷயா, தா்ஷன் ஆகிய நால்வரும் நண்பா்கள். பள்ளி விடுமுறை என்பதால், பொன்னங்குப்பத்தில் உள்ள மீன் வளா்க்கும் குட்டையில் வெள்ளிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். குட்டையின் கரைப் பகுதியில் விளையாடியபடி குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென நிலை தடுமாறி ஆழமான பகுதிக்குச் சென்று, நீச்சல் தெரியாமல் மூவரும் நீரில் மூழ்கினா். அவா்களது அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனா். இதில், தா்ஷன் மட்டும் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, சிறாா்கள் மூவரின் சடலங்களையும் மீட்டனா். சடலங்களை விக்கிரவாண்டி போலீஸாா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.