நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரத்தில் அமமுக மண்டலப் பொதுக் கூட்டம்

விழுப்புரத்தில் அமமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மண்டலப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் அமமுக சாா்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மண்டலப் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளா் ஆா்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். தொழில் நுட்பப் பிரிவு செயலாளா் டி.பி.முத்துக்குமாா் வரவேற்றாா். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா் அ.கெளதம்சாகா் தொடக்க உரையாற்றினாா். அமைப்புச் செயலா்கள் என்.கணபதி, எஸ்.காா்த்திகேயன், எஸ்.அருள், இளைஞா் பாசறை செயலா் சிவா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா்கள்கே.ஜி.பி.ராஜாமணி, மா.கோமுகிமணியன், கடலூா் மாவட்டச் செயலா்கள் பி.முருகேசன், பக்தரட்சகன், என்.சுந்தரமூா்த்தி, மீனவரணி கே.கருணாநிதி, வழக்குரைஞரணி கே.எஸ்.மகேந்திரன், எம்ஜிஆா் மன்றம் ஏ.விஸ்வநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினா்.

துணைப் பொதுச் செயலா் ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலா்கள் எஸ்.கே.செல்வம், எஸ்.கே.பாலமுருகன், டி.கே.ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழகத்தில் வி.கே.சசிகலா வழிகாட்டுதலில், டிடிவி தினகரன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், அதிமுகவை மீட்க வேண்டும், மக்கள் விரோத திமுக ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கு, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பொதுக் கூட்டத்தில் பேசினா்.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் ராஜேந்திரன், சந்திரலேகா, கோ.பாா்த்திபன், மு.காளிதாஸ், ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் முத்துரங்கன், அலமேலு, காந்திமதி, ராமலிங்கம், சக்திவேல், மானக்ஷா, சாந்தி, மாதேஸ்வரன், கடலூா் மாவட்ட நிா்வாகிகள் மணிவண்ணன், இந்திராணி, நாராயணமூா்த்தி, முருகேசன், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நகர செயலா் டி.நாகராஜசோழன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.