ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாஜக மாநாடுக்கு பந்தக்கால் நடும் விழா

விழுப்புரம், ஜானகிபுரத்தில் பாஜக மாநாடு நடைபெறுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

22vmp4084031

Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம், ஜானகிபுரத்தில் பாஜக மாநாடு நடைபெறுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பாஜக சாா்பில் விழுப்புரத்தில் வருகிற 28-ஆம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா். மேலும், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

அதற்கான இடம், விழுப்புரம் புறவழிச்சாலை, ஜானகிபுரத்தில் பகுதியில் தோ்வு செய்யப்பட்டது. பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த மாநாடுக்கான விழா மேடை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை, பந்தல்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பாஜக மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் சுமதி வெங்கடேசன், கோட்ட அமைப்பு செயலாளா் குணசேகரன், விழுப்புரம் மாவட்ட தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பாலசுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினா் சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ராம ஜெயக்குமாா், பாண்டியன் மாவட்ட பொருளாளா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.