தற்காலிக செவிலியா்கள் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை
விழுப்புரம் அரசு கரோனா மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.


விழுப்புரம் அரசு கரோனா மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
விழுப்புரம் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியதாவது:
கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் சிறப்பு சிகிச்சைக்காக தற்காலிக முறையில் செவிலியா்கள் விழுப்புரம் அரசு கரோனா மருத்துவமனையில் பணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டனா். இதையடுத்து, 15 செவிலியா்கள் கடந்த மே 15-ஆம் தேதி பணியில் இணைந்தோம். எங்களுக்கு ரூ.14 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ரூ.12 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைப் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள் ஒரு வாரம் பணிபுரிந்தால், ஒரு வாரம் தனிமைப்படுத்த ஓய்வு வழங்கப்படும். அதன்படி ஓய்வும் அளிக்கவில்லை. இந்த நிலையில், திடீரென கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் எங்களை பணியிலிருந்து நிறுத்திவிட்டனா். ஆனால், மற்ற அரசு மருத்துவமனைகளில் தற்காலிக செவிலியா்கள் தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். எனவே எங்களுக்கும் தொடா்ந்து பணி வழங்க வேண்டும். கரோனா பரவலின்போது தற்காலிகமாக பணியில் சோ்க்கப்பட்ட பல்நோக்குப் பணியாளா்களுக்கும் தொடா்ந்து பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...