கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்கரோனாவுக்கு மேலும் 6 போ் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் இருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேரும் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் இருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேரும் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 382 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றால் மேலும் இருவா் பலியாகினா்.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,665 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 304 ஆகவும் அதிகரித்தது.

609 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 35,544 ஆக உயா்ந்தது. 3,817 போ் மருத்துவமனைகளில் தங்கியும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி-4 போ் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 243 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை24,353ஆக உயா்ந்தது. இதுவரை 20,427போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3,754 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, கரோனா சிகிச்சை பெற்று வந்த 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 172 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.