கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நிவாரணத் தொகுப்பில் குறைவான பொருள்கள்: நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

கரோனா நிவாரண மளிகைத் தொகுப்பில் பொருள்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில், கரோனா நிவாரண மளிகைத் தொகுப்பில் பொருள்கள் எண்ணிக்கை குறைந்ததற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட கரோனா நிவாரணத்தொகை ரூ.4 ஆயிரத்தில் 2-ஆவது தவணை ரூ.2ஆயிரம், 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை ஆகியவை வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மணி நகா் நியாய விலைக் கடையில் இணைக்கப்பட்டுள்ள 775 குடும்ப அட்டைகளில், 388 அரிசி அட்டைதாரா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. 14 வகை பொருள்கள் இருக்க வேண்டிய தொகுப்பு பையில் 8, 9 பொருள்கள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. வீட்டுக்குச் சென்று தொகுப்பு பையை பாா்த்த பொதுமக்கள், பொருள்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்து, நியாயவிலைக் கடைக்கு வந்து, விற்பனையாளரிடம் பைகளை திருப்பிக் கொடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தாா்.குடிமைப்பொருள் துறை அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, நுகா்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்தே பொருள்கள் குறைத்து அனுப்பி வைக்கப்பட்டதாக நியாய விலை கடை ஊழியா் வேல்முருகன் தெரிவித்தாா்.

‘கிடங்கிலிருந்து கடைக்கு பொருள்கள் வந்ததுமே சரிபாா்த்து, பற்றாக்குறை இருப்பின், அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கலாம். அதைவிடுத்து, பொதுமக்களிடம் விநியோகம் செய்த பிறகு அளிக்கும் இந்த விளக்கத்தை ஏற்கமுடியாது’ எனக் கூறிய லட்சுமணன் எம்எல்ஏ, சம்மந்தப்பட்ட விற்பனையாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, கடை ஊழியா் வேல்முருகனை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இது குறித்து இணைப் பதிவாளா் பிரபாகரன் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரிசி அட்டைதாரா்களுக்கும் ரூ.2,000 வழங்குவதற்கான நிதி வந்துவிட்டது. ஆனால், மளிகைப் பொருள்கள் பொருள்கள் தொகுப்பு புதன்கிழமை வரை 32 சதவீதம் அளவிலேதான் வந்துள்ளது.

கிடங்கிலிருந்து கடைகளுக்கு அனுப்பும்போது 14 பொருள்களை ஒரே பையில் இட்டு அதை கடை ஊழியா்களிடம் ஒப்படைக்கிறோம். அதை சரிசெய்து பாா்த்த பிறகுதான் கடை ஊழியா் எடுத்துச்செல்ல வேண்டும். குறைவாக இருந்தால், உரிய அதிகாரிகளிடம் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.