கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 5:10 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 41,198-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே சாலையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்கவா் உள்பட மேலும் 3 உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 318-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், 445 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,365-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 2,515 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவா் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 172 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25,337-ஆக உயா்ந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 186-ஆக அதிகரித்தது. இதுவரை 23,052 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,092 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.