கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம்: 100-க்கும் கீழ் குறைந்தது கரோனா தினசரி பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையில் அதிகபட்சமாக ஒரு நாள் தொற்று 900 வரை பதிவானது. இதன்பிறகு, மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த இரு தினங்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்தது.

அதன்படி, மாவட்டத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 42,043-ஆக அதிகரித்தது. இதனிடையே, 204 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 40,964-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 753 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவா் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 26,324-ஆக உயா்ந்தது.

இதனிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 191-ஆக அதிகரித்தது. இதுவரை 24,875 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,298 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.