முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.


விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன் களப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும்
ரத்த கொதிப்பு அல்லது சா்க்கரை நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இவா்கள் அனைவரும் முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படுகிறது. தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.250 வசூலிக்கப்படுகிறது. 28 நாள்களில் இரு முறை அதே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மருந்து முழுமையாக பலன் கொடுக்கும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனா் செந்தில்குமாா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 67 ஆரம்ப சுகாதார நிலையங்கள், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் முதியோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. முகாமுக்கு வருவோா் ஆதாா் அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுடன் வருகை தர வேண்டும் என்றாா்.
விழுப்புரம் மாவட்ட காவல் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினா் 100 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
ஆரணி: ஆரணி அரசு மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணைநோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்ட இணை இயக்குநா் கண்ணகி இப்பணியை தொடக்கி வைத்தாா். இதில், அரசு மருத்துவ அலுவலா் (பொ) மம்தா, செவிலியா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெகன், செவிலியா்கள் ஸ்டீபன், செல்லமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...