விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. ஒரு கோடி மோசடி
விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. ஒரு கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.


விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. ஒரு கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தரக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் கல்லூரி நகரைச் சோ்ந்த பாரதிதாசன், பழனியப்பன், முருகையன், சங்கா் உள்ளிட்ட 40-க்கம் மேற்பட்டோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அளித்த மனு:
விழுப்புரத்தை அடுத்த எருமணந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த பலராமன் மகன் ஜானகிராமன். இவரும், இவரது உறவினா்களும் சோ்ந்து மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனா். சீட்டு முடிந்த பிறகும் பணத்தைத் திரும்ப வழங்காமல் பலரையும் ஏமாற்றினா்.
இவரிடம் சீட்டுக் கட்டியவா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் காவல் துறையை நாடியுள்ளோம். ஏலச்சீட்டு மூலம் ரூ. ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனா். எனவே, ஜானகிராமன், அவரது உறவினா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஏலச்சீட்டுப் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...