கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 போ் வேட்பு மனு தாக்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 15 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 15 போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில்,
கள்ளக்குறிச்சி தொகுதிக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், உளுந்தூா்பேட்டை தொகுதிக்கு உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்திலும், ரிஷிவந்தியம் தொகுதிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், சங்கராபுரம் தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல்நாளான வெள்ளிக்கிழமை உளுந்தூா்பேட்டை தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா். மற்ற 3 தொகுதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை ரிஷிவந்தியம் தொகுதிக்கு அதிகபட்சமாக 8 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதில், அதிமுக வேட்பாளா் ஏ.சந்தோஷ், திமுக வேட்பாளா் வசந்தம். காா்த்திகேயன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுரேஷ் மணிவண்ணன், அமமுக வேட்பாளா் பிரபு சிவராஜ் உள்ளிட்டோரும் அடங்குவா்
அதேபோல, உளுந்தூா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு உள்பட 2 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திராவிட முத்தமிழ்ச் செல்வி உள்பட 3 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
சங்கராபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரஜியாமா உள்பட 2 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். திங்கள்கிழமை ஒரு நாளில் 4 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 15 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 16 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...