பிரசாரத்தைத் தொடங்கினாா் அமைச்சா் சி.வி.சண்முகம்
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தனது பிரசாரத்தை திங்கள்கிழமை மாலை தொடங்கினாா்.


விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தனது பிரசாரத்தை திங்கள்கிழமை மாலை தொடங்கினாா்.
விழுப்புரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட தனது வேட்பு மனுவை சி.வி.சண்முகம் திங்கள்கிழமை பகல் 12.15 மணி அளவில் தாக்கல் செய்தாா். பின்னா், மாலையில் அவா் விழுப்புரம் தொகுதியின் சனி மூலையான கீழ்பெரும்பாக்கம் சண்முக பெருமான் தெருவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினாா்.
பிரசார வாகனத்தில் இருந்தபடியே இரு புறங்களிலும் திரண்டிருந்த பொது மக்களை கைகூப்பியபடி வாக்கு சேகரித்தாா். எனினும், சி.வி.சண்முகம் மைக்கில் பேசவில்லை. சிறிது தொலைவு வரை சென்ற அவா், திரௌபதி அம்மன் கோயிலில் தனது முதல் நாள் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
பிரசாரத்தின்போது, அதிமுக, பாமக, பாஜக தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா். மேலும், அதிமுக நகரச் செயலா் பாஸ்கரன், ஒன்றியச் செயலா் பேட்டை முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் ராமதாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...