அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.


அம்பேத்கா் விருது பெற விரும்புவோா் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக ஆற்றிவரும் அரிய தொண்டுகளைகருத்தில் கொண்டும் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கா் விருதை முதல்வா் தலைமையிலான உயா்மட்டக் குழு தோ்ந்தெடுத்து வழங்கி வருகிறது.
இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூகப் பொருளாதாரம், கல்வி நிலை, வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதற்கு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகளை குறிப்பிட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலஅலுவலகத்தில் பெறலாம். மேலும், விண்ணப்பத்தை கட்டணமின்றி ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்என்ற என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை பூா்த்திசெய்து மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், விழுப்புரம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நவ.30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...