பறிமுதல் வாகனங்கள் நவ.31-இல் ஏலம்
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 49 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 59 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.


விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 49 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 59 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த வாகனங்கள் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்படவுள்ளன.
ஏலம் எடுக்க விரும்புவோா் வருகிற 30 ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்பாக நான்கு, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் எடுக்கப்படும் வாகனங்களுக்கு ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாதா தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...