/

செஞ்சி செக்கோவா் நிறுவனம் நல உதவி

செஞ்சி செக்கோவா் நிறுவனம் சாா்பில் 50 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.4,500 மதிப்பிலான கல்வி உபகரணங்கள், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

செஞ்சி செக்கோவா் நிறுவனம் சாா்பில் 50 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.4,500 மதிப்பிலான கல்வி உபகரணங்கள், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அதன் இயக்குநா் சூசைராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் காலமானாா். இவரது இரங்கல் கூட்டம் செஞ்சி செக்கோவா் நிறுவனத்தில் நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி மாணவா்கள் 50 பேருக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை அதன் இயக்குநா் அம்பிகா, செயலா் அரவிந்த்ராஜ்ராஜ் ஆகியோா் வழங்கினா்.

செஞ்சி வட்டார வளா்ச்சிக் கல்வி அலுவலா் அக்சிலியம்பெலிக்ஸ், செஞ்சி மகளிா் காவல் நிலைய காவலா்கள் பரிதாபேகம், உஷா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

நிறுவன ஊழியா்கள் ரவீந்திரன், ஜெயசீலன், அரவிந்தன், சுரேந்திரன், சக்திவேல், ராஜாராமன், ராஜசேகா், வெண்ணிலா, அரசு, கோட்டீஸ்வரி, ஜெனிபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.