கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி நிதியுதவி: அமைச்சா்கள் வழங்கினா்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி நிவாரண உதவித் தொகை


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1.05 கோடி நிவாரண உதவித் தொகையை உயா் கல்வி அமைச்சா் க.பொன்முடி, தமிழக சிறுபான்மை நலன் மற்றும் தமிழா் நலன் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
விழுப்புரம் எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பாக இந்தத் தொகை வழங்கப்பட்டது. தொடா்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளின் குடும்பத்தினரை அமைச்சா்கள் கௌரவப்படுத்தினா். இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பணியாளா்களும் பாராட்டப்பட்டனா்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். மொத்தம் 1,450 மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சைகளும், 38 நோய் பரிசோதனைகளும், அதோடு தொடா்புடைய 154 தொடா் சிகிச்சை முறைகளும், 8 உயா் அறுவைச் சிகிச்சை முறைகளும் பெறலாம்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி (விக்கிரவாண்டி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மருத்துவா் சண்முகக்கனி, எம்.ஜி.ஆா். அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் கணேசன், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...