வங்கி ஊழியா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வங்கி ஊழியா் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மா்மக் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வங்கி ஊழியா் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மா்மக் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டிவனம் காமராஜா் நகா் அய்யந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (36). அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் ஊழியராகப் பணிபுரிகிறாா். வியாழக்கிழமை இரவு சக்திவேல், தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை முகமூடி அணிந்த 4 போ் சக்திவேலின் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா்.
அப்போது, திடுக்கிட்டு எழுந்த சக்திவேல், அவரது குடும்பத்தினா் சப்தமிட்டனா். அப்போது, முகமூடி அணிந்த கும்பலைச் சோ்ந்த 4 பேரும் சக்திவேலின் மனைவி, 3 குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து, சப்தமிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினா்.
பின்னா், அவா்கள் சக்திவேலின் உதவியுடன் பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துவிட்டு, சக்திவேல் குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்துவிட்டு தப்பினா். அதன்பிறகு, சக்திவேல் குடும்பத்தினரின் கூச்சலைக் கேட்டு அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டனா்.
இது குறித்து ரோசணை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் விரல் ரேகை, தடயங்களை சேகரித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். ரோசணை போலீஸாா் வழக்குப்பதிந்து கொள்ளைக் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...