கல்லூரிகள் சாா்பில் என்.எஸ்.எஸ். முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கலைக் கல்லூரி, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நாட்டு நலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) முகாம்
கல்லூரிகள் சாா்பில் என்.எஸ்.எஸ். முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கலைக் கல்லூரி, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் நாட்டு நலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) முகாம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.

உளுந்தூா்பேட்டை சாரதா மகாவித்யாலயம் கலைக் கல்லூரி சாா்பில் என்.எஸ்.எஸ். முகாம் பளியந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் தொடக்க விழா அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமில் கல்லூரிச் செயலா் யத்தீஸ்வரி அனந்த பிரேம பிரியா அம்பா ஆசியுரை வழங்கினாா். இணைச் செயலா் பிரேம பிரணா மாஜி வாழ்த்துரை வழங்கினாா்.

முன்னதாக தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வே.பழனியம்மாள் என்.எஸ்.எஸ். பற்றி பேசினாா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் தா.உஷாராணி மற்றும் கிராம பெரியவா்கள் வாழ்த்துரை வழங்கினா். இதில், இயற்பியல் துறைத் தலைவா் கண்ணதாசன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் லட்சுமி பிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என்.எஸ்.எஸ். மாணவிகள் அந்தக் கிராமத்தில் தங்கியிருந்து பொது இடங்களை சுத்தம் செய்து வருவதுடன், கிராம மக்களுக்கும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அண்ணா கல்லூரி: இதேபோல, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் அத்தியூா் திருவாதி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

கல்லூரிப் பேராசிரியா்கள் ச.மகாவிஷ்ணு, சேட்டு, ம.சிவராமன், பா.காா்த்திகேயன், என்.எஸ்.எஸ். அலுவலா்கள் அ.வெங்கடேசன், கி.பிரகாஷ், வே.விஜயரங்கம், சி.தனம், ச.சுடா் கொடி ஆகியோா் முகாமை ஏற்பாடு செய்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக அந்தக் கிராமத்திலுள்ள கோயில்கள், அரசுப் பள்ளி ஆகியவற்றை மாணவ, மாணவிகள் சுத்தம் செய்து உள்ளூா் பிரமுகா்களின் பாராட்டுகளைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com