தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை 1.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்புசொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில் 1.71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 11:29 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாமில் 1.71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

அருகிலுள்ள மாவட்டங்களின் குடிசைப் பகுதிகள், நரிக்குறவா் சமுதாயத்தினா் வசிக்கும் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயா்ந்துள்ள மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களிலும் சிறப்பு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேலும், தோ்வு செய்யப்பட்டுள்ள 1,651 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 740 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.