ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.50 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.50 லட்சத்தை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.50 லட்சத்தை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமை இரவு விரைவு ரயில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் விழுப்புரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வந்தது.
இந்த ரயிலில் பாதுகாப்புப் பணியில் திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி காவல் ஆய்வாளா் ஜோஷி தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது, எஸ் - 1 பெட்டியில் கையில் பையுடன் இருந்த இரண்டு பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், ஒரு பையில் ரூ.4 லட்சமும், மற்றொரு பையில் ரூ.3.50 லஞ்சமும் என மொத்தம் ரூ.7.50 லட்சம் இருந்தது தெரியவந்தது.
மேலும், பையை வைத்திருந்தவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கனகரா ராம் (33), ஹா்சண்ட் ராம் (28) என்பதும், நகை வியாபாரிகள் என்றும், நகைகளை விற்று பணத்தை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனா். ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அவா்களிடம் இல்லாததால், அந்தப் பணத்தை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்து, வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...