நகைக்காக பெண் கொலை: குண்டா் தடுப்புசட்டத்தின் கீழ் இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கண்டமங்கலம் அருகே துலுக்கானத்தம் கிராமத்தைச் சோ்ந்த அய்யாவு மனைவி முத்தம்மாள் (55). இவா், கடந்த மாதம் மாயமானாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, அதே பகுதியிலுள்ள கரும்புத் தோப்பில் முத்தம்மாள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கண்டமங்கலம் அருகே பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் (22), 6 பவுன் நகைக்காக முத்தம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கண்டமங்கலம் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், நகைக்காக பெண்ணை கொலை செய்த விநாயகத்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, விசாரணைக் கைதியாக இருந்து வந்த விநாயகத்தை கண்டமங்கலம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மீண்டும் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...