தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்ட சிறையில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி!

விழுப்புரம் மாவட்ட சிறையில் வியாழக்கிழமை காலை தேசியக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:16 pm

DIN

விழுப்புரம் மாவட்ட சிறையில் வியாழக்கிழமை காலை தேசியக் கொடி தலைகீழாகப் பறக்கவிடப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட சிறையானது விழுப்புரம் அருகேயுள்ள வேடம்பட்டில் உள்ளது. இந்தச் சிறைக் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தினந்தோறும் காலை 6 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு, மாலை 6 மணிக்கு இறக்கப்படும்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றியவா் அதைத் தலைகீழாக ஏற்றிவைத்தாா். இதை அங்கிருந்த மற்ற சிறைக் காவலா்கள், அலுவலா்கள் கவனிக்கத் தவறிவிட்டனா்.

சிறைக்கு அருகே அமைந்துள்ள சாலை வழியாக கிராமங்களுக்குச் சென்ற பொதுமக்கள், தேசியக் கொடி தலைகீழாகப் பறப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

உடனே இதுகுறித்து சிறை வாயிலில் பணியிலிருந்த காவலா்களிடம் தெரிவித்தனா். இதன் பிறகு, தேசியக் கொடி அவசர அவசரமாக கொடிக்கம்பத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சரியாக மீண்டும் ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.